ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.3½ லட்சம் பறிமுதல்
ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.3½ லட்சம் பறிமுதல்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 15 உள்ளாட்சி அமைப்புகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஊட்டி-குன்னூர் சாலை வேலிவியூ பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேத்தியில் இருந்து ஊட்டியை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, சிவக்குமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ.2 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோன்று கூடலூர் தாலுகா நடுவட்டம் அருேக டி.ஆர்.பஜாரில் சைபுதீன் என்பவர் மினி லாரியில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.