வைத்தியநாதசாமி கோவில் தேரோட்டம்

வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-02-07 12:38 GMT
சீர்காழி:-

வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதசாமி ேகாவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

வைத்தியநாதசாமி கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இங்கு வைத்தியநாதசாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் செவ்வாய், தன்வந்திரி உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் செல்வ முத்துக்குமாரசாமிக்கு தைமாத திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 
அதன்படி கடந்த மாதம் 30-ந் தேதி தை மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் செல்வமுத்துக்குமார சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் யானை வாகனம், வெள்ளி இடும்பன் வாகனம், காமதேனு வாகனம் என பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடந்தது. 

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருள, திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 
முன்னதாக தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் 4 வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்