மறைமலைநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மறைமலைநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு கொண்டார். பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர்.

Update: 2022-02-07 12:15 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 30), இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு கன்னியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கன்னியம்மாளின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்