அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆனந்தம் மற்றும் மகிழ்மதி குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஜெ.ஜெ. நகர் கோட்டம் நிர்வாகத்தால் ஏமாற்றப்பட்டு காலதாமதமாக வீடுகளை ஒப்படைத்தனர். மேலும் கடுமையான விலை ஏற்றத்தை வீடுகள் மேல் செலுத்தி வசூலிக்கின்றனர். 2016-ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை 2019-ம் ஆண்டு வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ.24 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கட்டி வீட்டை வாங்கிய பிறகும் அதிக பணம் கேட்பதாகவும், அந்த பணத்தை தள்ளுபடி செய்து வீட்டு உரிமையாளர்களிடம் அதற்கான பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.