சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி போலீஸ் கமிஷனர் முக்கிய ஆலோசனை
சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.;
அந்த ஆலோசனையின் போது, குண்டர் சட்ட கைது நடவடிக்கை, பிணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பிணையை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சீராய்வு செய்யப்பட்டது.
வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்தும், வாகன தணிக்கை குறித்தும் பல முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டன.