வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
திங்கள்சந்தை:
குருந்தன்கோடு அருகே உள்ள தெற்கு ஆலன்விளையை சேர்ந்தவர் அன்டலின் சுஜித் (வயது31) வியாபாரி. காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலையில் குருந்தன்கோடு பாலம் அருகில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அன்டலின் சுஜித்தை வழிமறித்து, வெட்டுக்கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து அன்டலின் சுஜித் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வியாபாரியிடம் பணம் பறித்ததாக ஆசாரிவிளையை சேர்ந்த கார்த்திக் என்ற சின்ன கார்த்திக் (26) என்பவரை கைது செய்தனர்