அம்மன் கோவிலில் பொருட்கள் திருட்டு
அம்மன் கோவிலில் பொருட்கள் திருட்டு போனது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மங்கூன்காடு கிராம மக்கள், பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்தில் உள்ள குலக்கரை முத்து மாரியம்மன் கோவிலில் வெள்ளி வேல், பித்தளை பொருட்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும், உண்டியலில் இருந்த ஆயிரம் ரூபாயையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். ஏற்கனவே 2 முறை இதே கோவிலில் திருட்டு நடந்தபோதும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே இந்த முறையாவது கோவில் திருட்டு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.