மேலும் 33 பேருக்கு கொரோனா
மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 33 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 13 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 78 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 97 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 337 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 771 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 201 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 254 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.