குளத்தில் தவறி விழுந்து சிறுவன் சாவு

ஆலங்குளம் அருகே குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலியானான்.

Update: 2022-02-06 20:23 GMT
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள சோலைசேரி மொட்டையன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் இளவரசன் (வயது 13). இவன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்ற இளவரசன் மதியம் வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவனை பல்வேறு இடங்களில் தேடினார்கள். 

அப்போது, ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர், இளவரசன் ஊருக்கு அருகில் உள்ள பெரியகுளத்தில் குளிக்க சென்றதை பாா்த்ததாக தெரிவித்தார். இதையடுத்து குடும்பத்தினர் குளத்திற்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது, குளத்தில் இருந்து இளவரசன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் இளவரசன் குளத்தில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்