போலீசார் கொடி அணிவகுப்பு

தென்காசியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2022-02-06 20:19 GMT
தென்காசி:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் தென்காசியில் நேற்று கூலக்கடை பஜார், மவுண்ட் ரோடு, வேம்படி பள்ளிவாசல் தெரு, கொடிமரம் ஆகிய பகுதிகளில் இந்த ஊர்வலம் நடைபெற்று காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு முடிவடைந்தது. இதில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டுகள், போலீசார் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம், ரஹ்மானியாபுரம், மெயின் பஜார், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

மேலும் செய்திகள்