மதுரையில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
மதுரையில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.
மதுரை,
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் துளசிராம் தெரு, சவு டேஸ்வரி அம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, மாடன் தெரு ஆகிய பகுதிகளில் சாக்கடை நீர் செல்ல வசதி இல்லாததால், சாலைகளில் தேங்கி இருக்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அவல நிலையும் உள்ளது. இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்தபகுதி மக்கள், நேற்று காலை சாலை களில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். 90-வது வார்டு பகுதியில் சாக்கடை, சாலை வசதி செய்தால் மட்டுமே வாக்களிப்போம் என பொதுமக்கள் அறிவித்து உள்ளனர்.