பயிர் மதிப்பீட்டு கணக்கெடுப்பு
சிவகாசியில் பயிர் மதிப்பீட்டு கணக்கெடுக்கும் பணியில் வேளாண் மாணவர்கள் ஈடுபட்டனர்.
சிவகாசி,
சிவகாசி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நடைபெற்ற பயிர் மதிப்பீட்டு கணக்கெடுப்பில் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சபரிவாசன், லட்சுமணன், சரவணக்குமார், பிரேம் லியோ, அப்துல், மோசஸ், ரேவந்த், தயாநிதிசுகந்த், கோகுல் நாத், கணபதி ஆகியோர் கலந்து கொண்டு பயிர் மதிப்பீட்டு கணக்கெடுப்புகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டனர். மேலும் புள்ளியல் துறையின் பங்களிப்பு பற்றியும், பயிர் காப்பீட்டுதுறையின் பங்களிப்பு பற்றியும் அறிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர், வேளாண் அலுவலர் சுமதி ஆகியோர் செய்திருந்தனர்.