கார் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவு

பாளையங்கோட்டையில் கார் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-02-06 20:03 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ. காலனி பகுதியை சேர்ந்தவர் ஜான் செல்வகுமார் (வயது 67). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று ரெட்டியார்பட்டி - ஜெபா கார்டன் ரோட்டில் 14-வது குறுக்கு தெரு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக ஜான் செல்வகுமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்