பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
விழுப்புரத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யபட்டு இன்று (திங்கட்கிழமை) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதனால் வேட்பாளர்கள் தங்களது வார்டுகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ கொடுத்து வாக்குகளை பெறுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விழுப்புரம் நகர எல்லையில் உள்ள முக்கிய சாலைகளில் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் அல்லது பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.