வீடு புகுந்து 11 பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 11 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-06 19:56 GMT
மதுரை, 
மதுரை எஸ்.எஸ்.காலனி சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி முருகேஸ்வரி. சம்பவத்தன்று இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பக்கத்து வீட்டை சேர்ந்த உமா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்