சரக்கு வாகனம் தீயில் கருகியது
சாத்தூர் அருகே சரக்கு வாகனம் தீயில் கருகியது.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 25). இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் சோலைகுமார் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் வேலை முடித்து வாகனத்தை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் இரவு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் தீயணைப்பு துறையினர் சோலைகுமாருக்கு போன் செய்து வண்டி தீப்பிடித்து முழுவதும் எரிந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். உடனே அவர், பாண்டீஸ்வரியை அழைத்து கொண்டு வண்டி நின்ற இடத்திற்கு வந்து பார்த்தார். அப்போது வண்டி முழுவதும் எரிந்த நிலையில் இருந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பாண்டீஸ்வரி அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.