நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வட்டார பார்வையாளர்கள் நியமனம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். புகார்களை ெதரிவிக்க அவர்களது செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-02-06 19:10 GMT
ராமநாதபுரம்,பிப்.7-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். புகார்களை ெதரிவிக்க அவர்களது செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நகராட்சி

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. மாவட்டத்துக்கு தேர்தல் பார்வையாளராக அஜய்யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ராமேசுவரம் நகராட்சிக்கு அன்னமாள், (அவரது செல்போன் எண் 80724 02037), ராமநாதபுரம் நகராட்சிக்கு மரகதநாதன், (94450 00362), கீழக்கரை நகராட்சிக்கு சிவசங்கரன்,( 94454 77843), பரமக்குடி நகராட்சிக்கு ராஜேந்திர பிரசாத், (82203 08836) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

பேரூராட்சி
கமுதி பேரூராட்சிக்கு குருசந்திரன், (94438 70226), முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு கேசவராமன்(79048 12411), அபிராமம் பேரூராட்சிக்கு ெஜர்சன் தங்கராஜ்(88701 67153), தொண்டி பேரூராட்சிக்கு செல்வம்(94867 46494), ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு பானுபிரகாஷ்(94430 90564), மண்டபம் பேரூராட்சிக்கு சிவகுமாரி(75027 97437), சாயல்குடி பேரூராட்சிக்கு ராஜேந்திரன்(94436 19721) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களுக்கு வட்டார பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த தகவலை மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்