திருக்கல்யாண உற்சவம்

அழகன்குளம் சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Update: 2022-02-06 19:00 GMT
பனைக்குளம், 

 மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் பஸ் நிறுத்தம் அருகில் ஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை ஸ்ரீரங்கம் ரங்கராஜன் பட்டாச்சாரியர் தலைமையில் அர்ச்சகர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.
முன்னதாக அழகன்குளம் கிராமத்தில் உள்ள நடராஜர் கோவில், நவநீத கிருஷ்ணன் கோவில்,, முருகன் கோவில் மற்றும் அழகன்குளம் அழகிய நாயகி மாதர் சங்கம் உள்ளிட்ட சார்பில் வஸ்திரங்கள் சுவாமிக்கு சாத்தப்பட்டன. இதில் அழகன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் வக்கீல் அசோகன். அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்