போக்குவரத்து விதிமீறல்; 509 பேர் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 509 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-02-06 18:53 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு சிகப்பு விளக்கு எரியும்போது சிக்னலில் கடந்து சென்ற 7 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 20 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 306 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 135 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாத 19 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 22 பேர் மீதும் என மொத்தம் 509 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.59 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்