நெமிலியில் திராவிட விடுதலை கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நெமிலியில் திராவிட விடுதலை கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெமிலி
தமிழக அரசின் நீட் தேர்வு மசோதாவை நிராகரித்த தமிழக கவர்னரை கண்டித்து திராவிட விடுதலை கழகம் சார்பில் நெமிலி பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் திலீபன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த திலகா, மோகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்.