அரக்கோணத்தில் ரெயிலில் கடத்திய 13½ கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணத்தில் ரெயிலில் கடத்திய 13½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-02-06 18:27 GMT
அரக்கோணம்

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக அரக்கோணம் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரக்கோணம் வழியாக செல்லும் ரெயில்களில் ஏறி  சோதனை நடத்தினர். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலபுழாவை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது. 

அந்த ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனை செய்தனர். ஒரு பெட்டி கழிவறை அருகே 3 பைகளில் மொத்தம் 13 கிலோ 500 கிராம் கஞ்சா கிடந்ததை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை வேலூர் போதைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் அரக்கோணம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்