காதல் ஜோடி மீது கும்பல் தாக்குதல் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம் காதலியே சதிதிட்டம் தீட்டி வாலிபரை கொன்றது அம்பலம்
காதல் ஜோடி மீது கும்பல் தாக்குதல் சம்பவத்தில் திடுக்கிடும் திரும்பமாக வாலிபரின் கொலைக்கு காதலியே சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது.
மும்பை,
காதல் ஜோடி மீது கும்பல் தாக்குதல் சம்பவத்தில் திடுக்கிடும் திரும்பமாக வாலிபரின் கொலைக்கு காதலியே சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது.
2 பேர் கைது
மும்பை மாகிம் கடற்கரையில் அண்மையில் காதல் ஜோடியை கும்பல் தாக்கியது. இந்த சம்பவத்தில் வாலிபர் வாசிம்சவுத்ரி பலியானார். உடன் இருந்த 20 வயது இளம்பெண் படுகாயமடைந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட கோவண்டியை சேர்ந்த பால்கிருஷ்ணா மற்றும் கம்ரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் போலீசார் கைதான இருவரிடமும் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மூளையாக செயல்பட்ட காதலி
அதாவது வாலிபர் வாசிம் சவுத்ரியின் காதலி தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவரின் நடத்தை பிடிக்காததால் வாசிம் சவுத்ரியை கொலை செய்ய திட்டமிட்ட அவர், பால்கிருஷ்ணா மற்றும் கம்ரன் ஆகியோருடன் உதவியை நாடி உள்ளார்.
அவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று இரவு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வாலிபரை இளம்பெண் அழைத்து சென்றுள்ளார். அங்கு இளம் பெண், நண்பர்கள் வாலிபரை தாக்கி கொலை செய்துள்ளார்.
மேலும் கொலையில் தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்று கருதி இளம்பெண் தன்னை, தானே காயப்படுத்திக்கொண்டு மர்ம நபர்கள் தாக்கியதாக நாடகமாடியுள்ளார்.
இந்த நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த கொலை சதி தெரியவந்துள்ளது.
கொலைக்கு உடந்தை
மேலும் இந்த கொலைக்கு வாசிம் சவுத்ரியின் உறவினர் பெண்ணான ஹினா சேக் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
ஹினா சேக் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் வாசிம் சவுத்ரியை பழிவாங்க இந்த கொலைக்கு உதவியது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் கொலையில் தொடர்புடைய வாசிம் சவுத்ரியின் காதலி, ஹினா சேக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தற்போது மருத்துவ சிகிச்சையில் இருந்தால் சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.