நெகமத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை
நெகமத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை;
நெகமம்
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கபட்டு உள்ளது.
இந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெகமம் பேரூராட்சியில் 2 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் நெகமம் பொள்ளாச்சி-திருப்பூர் மெயின் ரோடு, மற்றும் நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்கின்றனரா? என ஆய்வு செய்து வருகின்றனர்.