கோவை
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து போத்தனூரை நோக்கி வந்த ரெயிலில் அடிபட்டு 3 காட்டு யானைகள் பலியாகின.
இந்தநிலையில் இங்கு உள்ள ரெயில்வே தண்டவாள பாதையில் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் கோவை மாவட்ட வன அதிகாரி அசோக் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
ரெயிலில் அடிபட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 காட்டு யானைகள் இறந்த இடத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
வனத்துறை சார்பில் தண்டவாளத்தை ஒட்டி யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கு வகையில் ஏற்கெனவே இருந்த 9 பேருடன், கூடுதலாக 10 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்களின் குறித்தும் தலைமை வன உயிரின பாதுகாவலர் கேட்டறிந்தார். விவசாயிகளிடம் கேட்டபோது அப்பகுதியில் ரயில் அதிவேகத்துடன் தான் வருகிறது என்று தெரிவித்தனர்.