கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சார்பு ஆய்வாளர்கள் தியாகராஜன், பாரத நேரு மற்றும் அதிகாரிகள் மற்றும் வடக்கிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார் நடுப்புணி ரோடு குருமாண்டகவுண்டனூர் பிரபு தோட்டம் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரின் பின்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளைகவுண்டன்புதூரை சேர்ந்த தொழிலாளி விஜயன் என்பதும், கேரளாவுக்கு ரேஷன் அரிசை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து விஜயனை போலீசார் கைது செய்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.