பொள்ளாச்சி அருகே ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ 80 ஆயிரம் பறிமுதல்

பொள்ளாச்சி அருகே ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ 80 ஆயிரம் பறிமுதல்

Update: 2022-02-06 17:38 GMT
பொள்ளாச்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே சமத்தூரில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது காரில் வந்த ஆனந்தராஜ் என்பவரிடம் ரூ.80 ஆயிரம் இருந்தது, அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. 

இதையடுத்து அந்த பணத்தை துணை தாசில்தார் காயத்ரி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசுவாமி ஆகியோர் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை சமத்தூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்