நாசரேத் அருகே பெண் தற்கொலை
பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள நெய்விளை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் மனைவி பிரேமா (வயது 56). மகாராஜனும், பிரேமாவும் கடந்த பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இம்மானுவேல் என்ற ஒரு மகன் இருந்தார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இம்மானுவேல் ஒரு வாகன விபத்தில் இறந்துவிட்டார். பிரேமா மட்டும் நெய்விளையில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை பிரேமா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாசரேத் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பட்டாணி வழக்குப்பதிவு செய்தார். உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.