எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை

கீழ்வேளூர் அருகே எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-02-06 17:16 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலி மருந்தை தின்று தற்கொலை
கீழ்வேளூர் அருகே சிகார் கிராமம் செட்டித்தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் சக்திவேல் (வயது 19). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், திருவாரூரில் உள்ள தனியார் மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு தாமதமாக வருவதால் பெற்றோர் கண்டித்து உள்ளனர்.இதனால் மன உளைச்சல் அடைந்த சக்திவேல் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று மயங்கி விழுந்தார்.உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்