முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-06 14:23 GMT
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத்தொடங்கியது. 
இந்நிலையில் தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 900 கனஅடி திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் வினாடிக்கு 600 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 133.05 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்