விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள மசக்கல் தீனட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி அசோக்(வயது 33). இவருடைய மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. முன்னதாக பிரசவத்துக்காக கக்குச்சியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்ற அவர், குழந்தையுடன் அங்கேயே தங்கி இருந்தார். இதனால் மனைவியை பார்க்க அசோக் தனது தாயாருடன் மாமியார் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து தாயாரை அங்கு தங்க வைத்துவிட்டு, தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, பக்கத்து வீட்டுக்காரர்களான தர்மராஜ், சிவா, நவீன் ஆகியோர் நில பிரச்சினை ெதாடர்பாக அவரது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதை அசோக் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து அசோக்கை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் தர்மராஜ், சிவா, நவீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.