20 அடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த குடிநீர்

20 அடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த குடிநீர்;

Update: 2022-02-06 14:03 GMT
ஊட்டி

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பார்சன்ஸ்வேலி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 3-வது குடிநீர் திட்டம் மூலம் மேல் தலையாட்டுமந்து, கோடப்பமந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய்களில் குடிநீர் கொண்டு சென்று தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. அங்கிருந்து வீடுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. 

இந்தநிலையில் ஊட்டி சவுத்வீக் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் சுமார் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்து வீணாக வெளியேறியது. இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு குடிநீர் வினியோகம் செய்வதை நிறுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் வெளியேறிய பிறகு குடிநீர் நின்றது. அதன்பின்னர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்