மூதாட்டி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
மூதாட்டி வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.;
போடி:
போடி கரட்டுப்பட்டி ரோட்டில் வசிப்பவர் குருவம்மாள் (வயது 60). இவரது வீட்டுக்குள் நேற்று காலை ஒரு பாம்பு புகுந்தது. இது குறித்து உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் பதுங்கி இருந்த சுமார் 7 அடி நீளமுள்ள சாரைபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.