வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது;

Update: 2022-02-06 13:29 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று  மாலை திருவண்ணாமலையை சேர்ந்த வசந்த் என்பவர் வெளியூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

 அப்போது அங்கு வந்த 2 பேர் வசந்தை வழிமறித்து மிரட்டி அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். 

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 விசாரணையில் அவர்கள் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த விஜய் (வயது 21), சொர்பனந்தல் கிராமத்தை சேர்ந்த சுதாகர் (20) என்பது தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்