கஞ்சாவுடன் சிக்கிய 9 பேர் கைது

கஞ்சாவுடன் சிக்கிய 9 பேர் கஞ்சாவை விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-06 12:28 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் சுங்குவார் சத்திரம் பஜார் மற்றும் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது நவீன் (28), அலெக்ஸ் (21), சித்தார்குமார் (29) உள்பட 4 பேர் கஞ்சாவை விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கிழக்கரணை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 5 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இலங்கை நாட்டை சேர்ந்த சைமன்ராஜ் (வயது 24), சுமன் (21), கார்த்திக் (23), பிரவீன் (23), முத்துமணி (23) ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மேலும் செய்திகள்