சென்னை விமான நிலையத்தில் கொழும்பு செல்ல வந்த பெண் கைது

46 ஆண்டுகளாக தாய் நாடான இலங்கைக்கு செல்லாமல் இருந்து வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-06 10:50 GMT
சென்னை மீன்ம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சரோஜினி (வயது 69) என்பவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவரான சரோஜினி, 1977-ம் ஆண்டு இலங்கை பாஸ்போா்ட்டில் தமிழ்நாட்டுக்கு வந்தாா். அதன்பிறகு கோவையில் தங்கிய அவர், கோவை ஆா்.எஸ்.புரத்தை சோ்ந்த அய்யாகண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இலங்கைக்கு செல்லாமல் இங்கேயே தங்கி விட்டார். மேலும் அவர், இந்தியரை திருமணம் செய்து கொண்டு போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போா்ட்டு வாங்கியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 46 ஆண்டுகளாக தாய் நாடான இலங்கைக்கு செல்லாமல் இருந்து வந்த சரோஜினிக்கு தற்போது இலங்கைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்ல வந்ததும் தெரிய வந்தது. அவரது இலங்கை பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், சரோஜினியை கைது செய்து சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்