மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ராஜபாளையத்தில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-02-05 20:31 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையம் பச்சைமடத்தில் வட்டாட்சியர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசகம், உதவியாளர் சீனிராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் டிராக்டரை பறிமுதல் செய்து,  தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மலர்விழி அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்