அகதிகள் முகாம் மாணவி பலாத்காரம்; வாலிபர் கைது
விருதுநகரில் அகதிகள் முகாமில் மாணவி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் அச்சப்பன் (வயது 22) என்பவர் ஆசை வார்த்தை கூறி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் அச்சப்பன் மீது போக்சோ சட்டதில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.