‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொற்றுநோய் பரவும் அபாயம்
தஞ்சை -நாகை சாலை சத்தியமூர்த்தி நகர் ரெயில்வே தண்டவாளம் அருகில் வாய்க்கால் உள்ளது. பாசன வசதிக்காக இந்த வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மதகு வழியாக அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி சாக்கடை நீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், தஞ்சாவூர்.