வீடு புகுந்து 22½ பவுன் நகை கொள்ளை

மூலைக்கரைப்பட்டி அருகே வீடு புகுந்து 22½ பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

Update: 2022-02-05 19:44 GMT
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே வீடு புகுந்து 22½ பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல முனைஞ்சிப்பட்டி இசக்கியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). பஞ்சாயத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டரான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இவருடைய மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. நேற்று காலையில் செல்வராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் இசக்கியம்மாளும் வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.

22½ பவுன் கொள்ளை

இவர்களது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நைசாக வீட்டுக்குள் நுழைந்து, பீரோவை திறந்து, அதில் இருந்த 22½ பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. 
மாலையில் வீட்டுக்கு வந்த செல்வராஜ், இசக்கியம்மாள் தங்களது வீட்டில் நகை, பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீடுபுகுந்து நகை-பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்