போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

காந்தி நினைவு நாளில் கோவையில் கோட்சே பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை அருகே தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-05 19:27 GMT
மயிலாடுதுறை:
காந்தி நினைவு நாளில் கோவையில் கோட்சே பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை அருகே தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டத்தில் காந்தி நினைவு தினத்தையொட்டி திராவிட இயக்கங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடந்த உறுதி ஏற்பு நிகழ்ச்சியின் போது கோட்சே பெயரை பயன்படுத்தக் கூடாது என தடுத்த போலீசாரை கண்டித்து மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் மெயின் ரோட்டில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தளபதிராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் நாகரத்தினம் வரவேற்று பேசினார். 
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோட்சே பெயரை பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் தரப்பில் தெரிவித்ததை கண்டித்தும், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின் போது குறுக்கிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
இதில் நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் அருள்தாஸ், ஒன்றிய தலைவர்கள் இளங்கோவன், குத்தாலம் முருகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்