சிவகங்கை மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

சிவகங்கை மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டன

Update: 2022-02-05 19:21 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டன.

285 வார்டுகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.இதையொட்டி கடந்த 28-ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வந்தன. இதில் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள 285 வார்டு உறுப்பினர் பதவிக்கு 1, 561 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது.இதில் 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன மீதி 1,544 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நகராட்சிகள்

சிவகங்கை நகராட்சியில் காலியாக உள்ள 27 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 152 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். 6-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சரத்குமார் என்பவருக்கு 21 வயது நிரம்பாததால் அவரது மனுவை தள்ளுபடி செய்து உதவித்தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார். இதே போல் 17-வது வார்டில் போட்டியிட்ட சுப்பிரமணியன் என்பவர் 2 வேட்புமனுக்கள் தாக்கல் செய்ததால் அவரது ஒரு மனு மட்டும் தள்ளுபடி செய்யபட்டது. மேலும் காரைக்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டு உறுப்பினர் பதவிக்கு 246 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யபட்டது. மீதியுள்ள 245 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேவகோட்டைநகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கு 171 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டன.மீதி 168 பேர் போட்டியிடுகின்றனர் மானாமதுரை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கு 133 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 1 மனு தள்ளுபடி செய்யபட்டது. மீதி உள்ள 132 மனுக்கள் ஏற்று கொள்ளபட்டா.

பேரூராட்சிகள்

இதே போல் கண்டனுார் பேரூராட்சியில் ஒரு மனுவும் கோட்டையூர் பேரூராட்சியில் ஒரு மனுவும், நெற்குப்பை பேரூராட்சியில் 2 மனுவும் பள்ளத்துார் பேரூராட்சியில் 2 மனுவும் புதுவயல் பேரூராட்சியில் 2 மனுவும் சிங்கம்புணரியில் 2 மனுவும்  சேர்த்து மொத்தம் 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்