மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
விராலிமலை,
விராலிமலை தாலுகா மேலப்பச்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோவிலுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மனைவி சின்னப்பொண்ணுவுடன் பாத்திமாநகர்-செவந்தியானிப்பட்டி சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த செவந்தியாணிப்பட்டியை சேர்ந்த முருகேசன் (57) என்பவர் எதிர்பாராதவிதமாக சுப்பிரமணியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சின்னப்பொண்ணு, முருகேசன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.