திருமணம் ஆகாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணம் ஆகாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-05 19:16 GMT
திருமணம் ஆகாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூலி தொழிலாளி
திருச்சி தென்னூர் சின்னசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 29). கூலி தொழிலாளியான இவருக்கு பெண் பார்த்து வந்தனர்.
இந்நிலையில் எந்த பெண்ணும் ராஜாவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திருமணமாகாத ஏக்கத்தில் மனவேதனை அடைந்த ராஜா நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்