பஸ் மோதி வாலிபர் பலி

பஸ் மோதி வாலிபர் பலி

Update: 2022-02-05 19:13 GMT
காட்டுப்புத்தூர், பிப்.6 -
தொட்டியத்தை அடுத்த அரசலூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ராஜசேகர் (வயது 27). கொத்தனாரான  இவர் நேற்று இரவு நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டிக்கு வேலைக்கு சென்று விட்டு சொந்த ஊரான அரசலூருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
வாழ்வேல்புத்தூர் அருகே வந்தபோது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ் மொபட் மீது மோதியது. இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்