இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் நண்பர்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து 18-ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபடி போட்டியை நடத்தினர். இதற்கு தமிழரசி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட விவசாய அணி காளிமுத்து, நெசவாளர் அணி சாரதி என்ற சாருஹாசன், ஒன்றிய விவசாய அணி ராஜபாண்டி, செயலாளர்கள் கணேசன், தனிக்கொடி, நிர்வாகிகள் சேதுபதி துரை, தனபால், பழனிவேல், தினேஷ்குமார், ராஜதுரை, தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.