கோவிலில் ஒரு மணி நேரமாக நின்ற பாம்பு
கமுதி அருகே கோவிலில் ஒரு மணி நேரமாக பாம்பு படமெடுத்து நின்றது.
கமுதி,
கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அரும்பவளநாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு நல்ல பாம்பு படம் எடுத்த நிலையில் நின்றது. இதனால் அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து கமுதி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாம்பை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.