நதிப்பாலம் கடல் பகுதியில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
பனைக்குளம் நதிப்பாலம் மற்றும் கோப்பேரி மடம் நீர்நிலைகளில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.
பனைக்குளம்,
பனைக்குளம் நதிப்பாலம் மற்றும் கோப்பேரி மடம் நீர்நிலைகளில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.
வெளிநாட்டு பறவைகள்
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ளது நதிப்பாலம் கடல் பகுதி. இந்த நதிப் பாலம் கடல் பகுதியில் வைகை நீரும் மற்றும் மழைநீரும் கலக்கும் பகுதியாகும். அதனால் இந்த நதிப்பாலத்தின் கடல்பகுதியில் உள்ள மீன்களை சாப்பிட கொக்குகள், நீர்க்காகம் உள்ளிட்ட பறவைகள் அதிக அளவில் எல்லா நாட்களிலும் குவிந்திருக்கும்.
இந்த நிலையில் பனைக்குளம் அருகே உள்ள நதிப்பாலம் கடல் பகுதியில் ஏராளமான செங்கால் நாரை மற்றும் சங்கு வளை நாரைகள், வெளிநாட்டு பறவைகள் இரைதேடுவதற்காக குவிந்துள்ளன. பறவைகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டடி உயரத்தில் நீண்ட கால், நீண்ட கழுத்துகளுடன் தண்ணீரில் நின்று மீன்களை வாயால் கவ்வியபடி இரை தேடுவதை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து ரசித்தனர்.
செங்கால் நாரை
இதேபோல் தேவிபட்டினம் அருகே உள்ள கோப்பேரி மடம் பகுதியில் உள்ள நீர்நிலை ஒன்றில் ஏராளமான செங்கால் நாரை பறவைகள் குவிந்துள்ளன. இவ்வாறு குவிந்துள்ள செங்கால் நாரைகள் இரைதேடும் போது ஒன்றை ஒன்று கூர்மையான வாயால் கொத்தியபடி சண்டையிட்டும் விளையாடுகின்றன. நீர்நிலைகளில் உள்ள மீன்களை வாயால் கவ்வி பிடித்தபடி பறந்து செல்வதும் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்து வருகின்றது.