வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ராமேசுவரம் பகுதியில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் பார்வையாளராக அஜய் குமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையை நேரில் பார்வையிட்டார். .தொடர்ந்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அந்த பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.