5 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை

திருவாரூர் மாவட்டத்தில் 5 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை யை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2022-02-05 18:28 GMT
திருவாரூர்:
சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக திருநங்கைகளுக்கு என உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் திருநங்கைகளுக்கு மாவட்ட கலெக்டரின் கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அதன்படி  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 22 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இந்தநிலையில் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதற்கட்டமாக 5 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்  வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட சமூகநல அலுவலர் கார்த்திகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்