தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
ஒரத்தநாடு அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஒரத்தநாடு:-
ஒரத்தநாடு அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவி தற்கொலை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று காலை அந்த மாணவி அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை மாணவி வாட்ஸ்-அப் மற்றும் மெசேஜ் வாயிலாக செல்போனில் சிலருக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது
ஆசிரியர் கைது
இதனைத்தொடர்ந்து அந்த மாணவியின் சித்தப்பா ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதில், மாணவியை பள்ளி ஆசிரியர் சசிக்குமார் திட்டியதாகவும், இதனால் மனம் உடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு போலீசார், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அதே பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.